பிப்.1ல் பகுதி சபா கூட்டம் : ஆணையர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் வருகிற பிப்.1ஆம் தேதி பகுதி சபா கூட்டம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.;

Update: 2024-01-29 01:50 GMT

மாநகராட்சி ஆணையர்

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள வார்டுகளுக்கு தலா 5 குழுக்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகின்ற 01.02.2024 வியாழக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற உள்ளது. மேற்படி பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News