மதுபோதையில் தகராறு:நண்பர் மீது திராவகம் வீச்சு !

திராவகத்தை நண்பர் மீது ஊற்றியதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.;

Update: 2024-05-03 05:10 GMT

திராவகம் வீச்சு

சேலம் செவ்வாய்பேட்டை மூலபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). அவரும், ராவணேஸ்வரர் பகுதியை சேர்ந்த தங்கராஜியும் (27) நண்பர்கள். மேலும் அவர்கள் இருவரும் ஒரே வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரும் வண்டிகார பேட்டை அருகே உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

Advertisement

அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்ற தங்கராஜ் வெள்ளிக்கு பயன்படுத்த கூடிய திராவகத்தை எடுத்து கொண்டு மீண்டும் அங்கு வந்து ரமேஷ் மீது ஊற்றினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News