மது போதையால் மனைவியுடன் தகராறு
கரூர் மாவட்டம், காந்திகிராம் பகுதியில் மனைவியை தாக்கிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு காந்திகிராமம், சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் வயது 42. இவரது மனைவி மஞ்சு வயது 39. இவர்கள் இருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அண்மைக்காலமாக செந்தில்குமார் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில், மது போதையில் வீட்டுக்கு வந்த செந்தில்குமாரை, அவரது மனைவி மஞ்சு தடுத்து நிறுத்தி கேள்விகளை எழுப்பி உள்ளார். இதனால் கோபமடைந்த செந்தில்குமார், அவரது மனைவி மஞ்சுவிடம் வாய் தகறாறு செய்து, பின்னர் தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி உள்ளார்.
இது தொடர்பாக மஞ்சு அளித்த புகாரில், மறுநாள் ஏப்ரல் 26 ஆம் தேதி இது தொடர்பாக சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் முடிவில், நேற்று செந்தில்குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த தாந்தோணி மலை காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.