மது போதையில் இருசக்கர வாகன ஓட்டியவர்கள் கைது - வாகனங்கள் பறிமுதல்.
களியக்காவிளை அருகே மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய இரண்டு பேரை கைது செய்த போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-07-05 03:59 GMT
காவல் நிலையம்
குமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குடிபோதையில் வாகன ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.களியக்காவிளை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மதுஅருந்தி வாகனம் ஓட்டி வந்த ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல் பி.பி.எம். பகுதி வழியாக மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.மதுபோதையில் வாகனம் ஓட்டிய இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.