குடிபோதையில் அரசு பேருந்தை எட்டி உதைத்தவர் கைது

மயிலாடுதுறையில்  நடு ரோட்டில் மது போதையில் நடனமாடி போக்குவரத்துக்கு இடையூறு செய்து சாலையில் வந்த அரசுப் பேருந்தை எட்டி உதைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-14 07:32 GMT

கைது செய்யப்பட்ட விஜயகுமார்

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில்  திருவிழாவுக்கு மைக் செட் கட்டப்பட்டுள்ளது. இதில், ஒளிபரப்பப்பட்ட பக்தி பாடலுக்கு கடந்த 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் சாமி வந்தது போல் நடு ரோட்டில் ஆடி வாகன ஓட்டிகளுக்கும் சாலையில்  கடந்து சென்ற வாகனங்களை நிறுத்தி, வாகனங்களை கையால் தாக்கியும், காரின் மீது காலை தூக்கி வைத்தும் அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.

குடிபோதை ஆசாமியின் செயலை பலர் பல்லைக் கடித்தவாறு பொறுத்துக்கொண்டு கடந்து சென்றனர். இறுதியாக அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை வழிமறித்த இளைஞர் சுமார் 5 நிமிடங்கள் அந்த பேருந்தை கடந்து செல்ல முடியாதவாறு தடுத்து நிறுத்தியதுடன், பேருந்தின் கண்ணாடியை கையால் தாக்கியும், பேருந்தை எட்டி உதைத்தும் அடாவடியில் ஈடுபட்டார். பேருந்து ஓட்டுநரும் செய்வதறியாது அதே இடத்தில் பேருந்தை நிறுத்தியிருந்தார். போதை தலைக்கேறிய இளைஞர் வலது காலால்  முதலில் பேருந்தை எட்டி  உதைத்தார் அதன் பின் இடது காலால் உதைத்தும் மறுபடியும் வலது காலால் உதைத்ததில் அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் சாலையிலேயே நிலை தடுமாறி விழுந்து துடிதுடித்தார்.

இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் அமல்ராஜ்  (12.06.2024) அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவை வைத்தும் விசாரணை செய்ததில் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலகுடி வடக்கு தெருவை சேர்ந்த வடிவேல் மகன் விஜயகுமார் (33) என தெரியவந்தது. மயிலாடுதுறை போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்

Tags:    

Similar News