கஞ்சா விற்பனை; 2 பேர் கைது

ஆரணியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-06-14 14:38 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை தொடர்ந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலின் பெயரில் பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் ஆரணி மார்க்கெட் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் பெரியபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சோதனை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நிஜந்தன் (வயது21),சஞ்சய் (வயது20) என்பது தெரிய வந்தது இதனை அடுத்து குற்றவாளிகள் இருவரையும் ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News