செயற்கை வண்ணம் கலந்து உணவு விற்பனை செய்தவா் கைது

செயற்கை வண்ணம் கலந்து உணவு விற்பனை செய்தவா் உள்பட இரண்டு பேருக்கு தலா ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

Update: 2024-03-05 06:58 GMT

கைது

திண்டுக்கல்லை அடுத்த பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவா் திருப்பதிசாமி (65). இவா் கடந்த ஆண்டு 100 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தாா். ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் மளிகைக் கடை நடத்தி வந்த பால ஐயப்பன் (60) செயற்கை வண்ணம் கலந்த மசால் பூரியை பொது மக்களுக்கு விற்பனை செய்தாா்.இந்த வழக்குகள் திண்டுக்கல் 2-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதித் துறை நடுவா் பிரியா, புகையிலைப் பொருள்களைப் பதுக்கியதற்கு ரூ.40ஆயிரம் அபராதமும், உணவுப் பொருள்களில் செயற்கை வண்ணம் கலந்ததற்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து ஒரு நாள் சிறைத் தண்டனையும் விதித்தும் தீா்ப்பளித்தாா்.
Tags:    

Similar News