சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
கருங்கல் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-05-02 01:32 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு மது மற்றும் கஞ்சா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது மேலும் சட்டவிரோத மது விற்பனை ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இந்த நிலையில் கருங்கல் அருகே உள்ள கஞ்சிக்குழி தோட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு.இவர் திருட்டுத்தனமாக மது விற்பதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் உதவி ஆய்வாளர் ஜான்போஸ்கோ மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி 80 மது பாட்டில்கள் மற்றும் ரூ.580 பறிமுதல் செய்தனர். அவற்றை பதுக்கி வைத்திருந்ததாக ராஜூ கைது செய்யப்பட்டார்.