சட்டவிரோத பெட்ரோல் விற்பனை - பெட்டிகடை உரிமையாளர் கைது
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பகுதியில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-01-10 01:51 GMT
சட்டவிரோத பெட்ரோல் விற்பனை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கடைவீதியில் உள்ள பாஸ்கரன் என்பவரது பெட்டிக்கடையில் அரசு அனுமதி இன்றி பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கொரடாச்சேரி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பெட்ரோலை போலீசார் பறிமுதல் செய்தனர் .தொடர்ந்து பாஸ்கரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.