வீண் தகராறு செய்து தாக்கிய வாலிபர் கைது
திருச்சி மாவட்டம் , புள்ளம்பாடி கடைவீதியில் நடந்து சென்றவரை தாக்கி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-05-04 08:17 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பெருவள்ளநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் 52 வயதான ரவி. இவர் புள்ளம்பாடி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடி தேரோடும் வீதியைச் சேர்ந்த 25 வயதான ராஜேஷ் என்கின்ற ராஜேஷ்குமார் நடந்து சென்ற ரவியிடம் வீண் வம்பு செய்து மிரட்டி கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரவி கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் என்கின்ற ராஜேஷ் குமாரை கைது செய்தனர்.