இடைத்தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வருகை

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு விழுப்புரத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

Update: 2024-03-08 16:04 GMT

  விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு விழுப்புரத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24 ம் தேதி முதல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.இந்த நிலையில் வருகின்ற மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது.குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கிய கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னணு இயந்திரங்கள் மக்களவைத் தேர்தலை நடத்த மட்டுமே போதும் போதியதாக உள்ளன. இதைத்தொடர்ந்து அளவுக்கு அதிகமாக இருப்பு உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அதிகாரிகள் விழுப்புரத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் சேமிப்புக் கிடங்கில் இருந்து 550 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் கருவிகள் குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News