குமரியில்  கலைப்போட்டி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைப்பு

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நாகர்கோவில் எஸ்.எல். பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Update: 2023-10-26 10:15 GMT

கலைப்போட்டியை தொடக்கி வைத்த அமைச்சர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்  நாகர்கோவில் எஸ்.எல். பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , பால்வளத் துறை அமைச்சர்   மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு,  மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளை  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பேசுகையில் - இவ்வாண்டும் அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழாப் போட்டிகள் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பாடுகள் வழிவகுக்கும்.

பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் கலைத்திருவிழாவில் தமிழ்நாட்டிற்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 24 இட்சம் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது கலைத்திறனை வெளிபடுத்த உள்ளார்கள். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும். 

    மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள்  வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்  முன்னிலை வகித்தார்.  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News