கலைதிருவிழா போட்டி- துவக்கி வைத்த எம்எல்ஏக்கள்
உடையார்பாளையத்தில் நடந்த பள்ளிக்கல்வித்துறை கலைத்திருவிழாவை எம்.எல்.ஏக்கள் துவக்கி வைத்தனர்.;
Update: 2023-10-29 06:51 GMT
கலைத்திருவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்த எம்.எல்.ஏ
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் தத்தனூர் MRC கல்லூரியில் நடைப்பெற்றது இதனை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர். இதனையடுத்து நடைப்பெற்ற நடனபோட்டி, பேச்சுபோட்டி உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர். மேலும் தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கபடும் திட்டங்களை பயன்படுத்தி தங்களது வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என கேட்டு கொள்ளபட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள், ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்