கலைத் திருவிழா; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கரூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கலெக்டர் தங்கவேல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Update: 2024-01-19 15:28 GMT

  கரூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

கரூர் மாநகராட்சி காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது,மாணவர்கள் ஒரு துறையில் மட்டும் வெற்றி காண்பதை விட, பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் படிப்பை தவிர, பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அது ஓவியமாகவோ, சிற்பமாகவோ, நடனமாகவோ அல்லது கராத்தே என ஏதாவது ஒன்றாக இருக்கலாம். மாணவர்களிடையே பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் இது போன்ற கலைத்திருவிழாக்களை போட்டி போடும் மனப்பான்மையில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு இதை நடத்தி வருகிறது. மாவட்ட முழுவதும் கலைத்திருவிழாவில் முதல் பரிசு பெற்ற 429 மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியாக இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த கலைத் திருவிழாவில் வெற்றி பெற்று பரிசு பெற்றவர்கள் மட்டும் வெற்றியாளர்களாக அல்ல அதில் கலந்து கொண்ட அனைவருமே வெற்றியாளர் தான். மாணவ- மாணவியர்கள் மேலும் மேலும் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் காமாட்சி மணிவண்ணன், செல்வமணி,மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் சக்திவேல், சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News