கலைஞர் நூற்றாண்டு விழா - 2 நாட்கள் குழு விளையாட்டுப் போட்டி

நாமக்கல்லில் கலைஞர் நூற்றாண்டு விழா - 2 நாட்கள் குழு விளையாட்டுப்போட்டி

Update: 2024-01-09 17:41 GMT

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மருத்துவா் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி, மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் கால்பந்து, வாலிபால், மற்றும் கபாடி ஆகிய விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டரங்கில் வருகிற ஜன. 10 மற்றும் 11 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் தனித்தனியே விளையாட்டுப்போட்டிகள் காலை 8 மணி முதல் நடைபெறும். இப்போட்டிகளில், 15 வயது முதல் 24 வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும், கபாடி போட்டிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக தலா ரூ.20,000, இரண்டாம் பரிசாக தலா ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வீதம் வழங்கப்படும். கால்பந்து போட்டிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக தலா ரூ.25,000, இரண்டாம் பரிசாக தலா ரூ.20,000, மூன்றாம் பரிசாக தலா ரூ.10,000 வீதம் வழங்கப்படும். வாலிபால் போட்டிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக தலா ரூ.15,000, இரண்டாம் பரிசாக தலா ரூ.10,000, மூன்றாம் பரிசாக தலா ரூ.5,000 வீதம் வழங்கப்படும்.

இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகல் அவசியம் கொண்டு வருதல் வேண்டும். எனவே, மேற்கண்ட விளையாட்டுப் போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவினர் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு சிங்குதுரை, வாலிபால் பயிற்சியாளர் தொலைபேசி எண் 85086 41786 மூலம் தொடர்புகொண்டு, அனைத்து குழு விளையாட்டுகளுக்கும் 9ம் தேதி மாலை மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News