கலைஞர் நூற்றாண்டு விழா: திருச்சி திமுக சார்பில் கிடா முட்டும் திருவிழா
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிடா முட்டும் திருவிழா நடைபெற்றது.;
ஆக்ரோசமாக முட்டி கொள்ளும் கிடாக்கள்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிடா முட்டும் சண்டை திருவிழா திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விக்னேஸ் நகர் அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மாவட்ட துணை செயலாளர் அ.த.த.செங்குட்டுவன் தலைமை தாங்கினார், கோவிந்தராஜ், குணசேகரன், பி.ஏ நூர் கான், சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன்,வண்ணை. அரங்கநாதன், கவுன்சிலர் செந்தில், பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் ,மற்றும் மாவட்ட ,ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள்,சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டகலந்து கொண்டு சிறப்பித்தனர்