நந்தா கலை அறிவியல் கல்லூரியில் கலைத்திறன் போட்டி
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் 16-வது ஆண்டாக 'ஹிலாரியோ 24' எனும் பெயரில் பல்வேறு கல்லூரிகளுக்கும் இடையேயான கலைத் திறன் போட்டிகள் நடந்தன.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 06:38 GMT
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் 16-வது ஆண்டாக 'ஹிலாரியோ 24' எனும் பெயரில் பல்வேறு கல்லூரிகளுக்கும் இடையேயான கலைத் திறன் போட்டிகள் கடந்த 2 நாட்கள் நடந்தன. இதன் தொடக்க நிகழ்ச்சியில், நந்தா கல்வி அறக்கட்டளை தலை வர்வெ.சண்முகன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், கல்வி அறக்கட்டளை செயலாளர் ச.நந்தகுமார் பிரதீப், கல்வி நிறுவனங்களின் செயலாளர் ச.திருமூர்த்தி, கல்லூரி முதல்வர் சு.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொருளா ளர் ச.பானுமதி சண்முகன், குத்துவிளக்கு ஏற்றி போட்டி களை தொடங்கி வைத்தார். தனியார் டி.வி, புகழ் கே.பி. ஒய்.வினோத், கே.பி.ஒய். ஹானஸ்ட்ராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தனிநடனம், பல குரல், தனிநபர் பாடல், குழு நடனம் உள்பட பல்வேறு போட்டி கள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 173 கல்லூரிகளில் இருந்து 4 ஆயிரம் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமை களை வெளிப்படுத்தினர். நேற்று மாலை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் திரைப்பட நடிகர் சாம், நடிகை ஜனனி ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.