கலைஞர் கனவு இல்லம் திட்டம் துவக்கம் !
குடிசைகள் இல்லா தமிழகத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.;
திருச்செங்கோடு
குடிசைகள் இல்லா தமிழகத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் கிராமப்புற ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு தலா ரூ 3.5 லட்சம் மதிப்பில்360 சதுர அடியில் கான்கிரீட் கட்டிடம் கட்டித் தரப்படுகிறது. இதன்படி திருச்செங்கோடு ஒன்றியத்தைச் சேர்ந்த 245 பயனாளிகளுக்கு ரூ 8 கோடியே57 லட்சத்து50 ஆயிரம்மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு அதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டது. திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில்,அட்மா தலைவர்திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல்,மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் ஆகியோர்கலந்து கொண்டு வழங்கினார்கள்.பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கிப் பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது தமிழகமெங்கும் குடிசைகள் இருக்கக் கூடாது என்ற கலைஞரின் கனவை நினைவாக்கும் வகையில் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளை சேர்ந்த குடிசைகள் வீடுகளில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்ட நிதி வழங்கி வீடுகள் கட்டித் தரும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது இது மத்திய அரசின் திட்டம் என கூறி ஏமாற்றி வருகின்றனர் நூறு ரூபாய்க்கு 32 ரூபாய் மட்டும்தான் மத்திய அரசு தருகிறது மீதி உள்ள 68 ரூபாயை தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் வழங்கி மக்கள் குடிசை வீடுகளில் இருந்து கான்கிரீட் வீடுகளுக்கு மாற நடவடிக்கை எடுத்து முதல் கட்டமாக இன்று ஆனைகளை வழங்கி உள்ளது. மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும் சரி எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமாக இருந்தாலும் சரி மத்திய அரசுஅறிவித்தபடி நிதி வழங்குவதில் காலதாமதம் செய்து வருகிறது கடுமையான நிதி நெருக்கடி இடையிலும் மக்களின் நல்வாழ்வுக்காக காலை உணவு திட்டம் கலைஞரின் கனவு இல்ல திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது எனக் கூறினார் நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி தலைவர்கள் ஒன்றிய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர் ஒன்றிய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.