தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-12-28 03:22 GMT

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் சோமேஸ்கந்தர் மற்றும் கிரிஜாம்பாள் சுவாமிகளுக்கு மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்று நான்கு ரத வீதிகளில் சுவாமி புறப்பாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதையடுத்து ஆருத்ரா தரிசனம் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நடராஜர் பெருமாளுக்கு மகா அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை கோவிலில் இருந்து புஷ்ப பல்லக்கில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது நேற்று முன்தினம் நடராஜர் சோமேஸ்கந்தர் அவதாரம் எடுத்து கிரிஜாம்பாள் சுவாமியை கல்யாணம் செய்து கொண்டதால் திருவீதி உலாவில் பாதி தூரத்தில் சிவகாம சுந்தரி அம்மாள் கோபித்துக் கொண்டு செல்லும் ஐதீகம் இருப்பதால் இரண்டு சுவாமி களையும் தனித்தனியாக பிரித்து எடுத்து திருவீதி உலா மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில் சிவகாம சுந்தரி அம்மாள் திருவீதி உலாவில் கோபித்துக் கொண்டு கோவிலை வந்தடைந்தவுடன் ஐதீகத்தின் அடிப்படையில் கோவில் கதவுகள் மூடப்பட்டது. இதையடுத்து தனியாக வந்த நடராஜர் கோவில் கதவை மூடிய சிவகாமசுந்தரி அப்பாளை திறக்க சொல்வது போல் கோவில் கதவை திறக்க மூன்று முறை கதவை இடிப்பது போல் இடிக்கப்பட்டு. மூன்றாவது முறை கதவு திறக்கப்பட்ட நிலையில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் ஆகிய சுவாமிகளுக்கு இடையே பினக்கை தீர்க்க சுந்தரமூர்த்தி வேடமணிந்து ஒருவர் சமாதானம் செய்து இரண்டு சுவாமிகளும் சமாதானமாகி பின்னர் கோவில் உள்ளே சென்ற நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது. இதையடுத்து நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அப்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தாரமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News