அருள்மிகு பொன் மாரியம்மன்- மதுரை வீரன் திருக்கோவில் திருவிழா
ராசிபுரம் அருள்மிகு பொன் மாரியம்மன்- மதுரை வீரன் திருக்கோவில் திருவிழா நடைபெற்றது.
Update: 2024-05-14 15:05 GMT
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பிள்ளாநல்லூர் அடுத்த பொன்குறிச்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பொன் மாரியம்மன்- மதுரை வீரன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 9/5/2024 அன்று ஆடல் பாடல் நிகழ்ச்சி, 10/5/2024 அன்று பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், தெருக்கூத்து மற்றும் மதுரைவீரன் ஆட்டம், 11/5/2024 அன்று அம்மன் திருவீதி ஊர்வலம் மற்றும் காட்டேரி ஆட்டம் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு முக்கிய அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரங்கள் செய்து மகா தீபாரணை நடைபெற்றது. மேலும் அருள்மிகு பொன் மாரியம்மன் சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், ரூபாய் நோட்டு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் சென்னை உட்பட தமிழத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இந்த திருவிழாவை ஊர் பெரியவர்கள் மற்றும் மதுரை வீரன் நண்பர்கள் குழு மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். மேலும் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.