அருந்ததியர் சமூக மக்கள் திமுகவுக்கு ஆதரவு

அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்கிய திமுகவிற்கு வரும் மக்களவை தேர்தலில் ஆதரவளிப்போம் என தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Update: 2024-02-27 07:39 GMT

மலர் வளையம் வைத்து மரியாதை 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் தமிழ் நாடு அருந்ததியர் முன்னேற்ற அறக்கட்டளையும் கலைஞர் அறிவு திருக்கோயில் நிர்வாகிகளும் அருந்ததிய மக்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு அளித்து அரசாணை ஏற்றி மக்களின் முன்னேற்றத்திற்காக வழிவகை செய்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன் முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அருந்ததிய அறக்கட்டளை செயலாளர் தவமணி தலைவர் சின்னசாமி மற்றும் கணேசன் பழனிவேல் செங்கோடன் ஏடிசி தங்கவேல் சகாதேவன் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது முன்னாள் முதல்வர் கலைஞரும் தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் ஒட்டுமொத்த அருந்ததிய சமூகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எங்களின் சமுதாய முன்னேற்றத்திற்கு மூன்று பர்சன்ட் உள் ஒதுக்கீடு கடந்த 2009 ஆம் ஆண்டு சட்ட வடிவமாக்கியதன் காரணமாக எண்ணற்ற ஏழை எளிய மாணவ மாணவிகள் பயின்றுள்ளார்கள் குறிப்பாக 2009க்கு பிறகு உள் ஒதுக்கீட்டின் காரணமாக 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மேலும் அரசுத்துறை பணியில் சேர்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது இன்றைய வரை அருந்ததியர்  சமுதாயத்தில் 1200 பேர் டாக்டர்களாக உருவாக காரணம் திமுகவையே சாரும் எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அருந்ததிய சமுதாய மக்கள் அனைவரும் திமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என்றார்கள்.

Tags:    

Similar News