திருமறையூர் மறுரூப ஆலயத்தில் சாம்பல் புதன்கிழமை ஆராதனை
சேகரம் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் சாம்பல் புதன்கிழமை ஆராதனை நடைபெற்றது. ;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 08:32 GMT
திருமறையூர் மறுரூப ஆலயத்தில் சாம்பல் புதன்கிழமை ஆராதனை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமறையூர் சேகரம் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் சாம்பல் புதன்கிழமை ஆராதனை நடைபெற்றது. ஆராதனையில் சேகர தலைவர் ஜான் சாமுவேல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.ஆராதனையில் சபை ஊழியன் ஸ்டான்லி ஜான்சன் துரை இந்திய மிஷனரி சங்க பொறுப்பாளர் குருவானவர் பொன்னுசாமி ஆகியோர் பங்குபெற்றனர்.சேகர பொருளாளர் அகஸ்டின் செல்வராஜ் மற்றும் ஐரின் ஆகியோர் வேதபாடங் களை வாசித்தனர்.சேகர தலைவர் ஜான் சாமுவேல் தேவசெய்தி வழங்கினார். ஆராதனையில் தேவகோபாக்கினை கூறல் என்கிற சிறப்பு எச்சரிப்பின் வார்த்தைகள் வாசிக்கப்பட்டு மக்கள் மனம் திரும்புவதற்கு நேராக வழிநடத்தப்பட்டனர். இந்த ஆராதனையில் திருச்சபை மக்கள் அநேகர் கலந்து கொண்டனர். பங்கு பெற்ற மக்களுக்கு தபசு நாட்களில் தங்கள் சுயத்தை வெறுத்து காணிக்கை சேர்ப்பதற்காக பனை ஓலையில் ஆன உண்டியல் வழங்கப்பட்டது.மக்கள் பனை ஓலையிலான உண்டியலை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். ஆராதனைக்கான ஏற்பாட்டினை திருமறையூர் சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்.