பெண் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வாணியம்பாடி அருகே வைக்கோல் போரில் மாடு மேய்ந்ததை தட்டி கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த நேத்தாஜி நகர் பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா வயது 54 .இவரது மனைவி சரசு வயது 50. இவரது மகன் லெனின் மற்றும் மருமகள் காயத்திரி இவர்கள் புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்தி இவரக்கு சொந்தமான பசு மாடு ஒன்று ராஜாவின் வைக்கோல் போரில் மேய்ந்து உள்ளது அப்போது ராஜாவின் மனைவி சரசு பசு மாட்டை விரட்டி உள்ளார் .
அப்போது சக்தி மற்றும் கோவிந்தன் தகராறில் ஈடுப்பட்டு சரசுவை கடுமையாக தாக்கி உள்ளனர் இதை அறிந்த அவரது கணவர் ராஜா மற்றும் மகன் லெனின் ஆகியோர் தட்டிகேட்டதற்கு இவரையும் கடுமையாக தாக்கி உள்ளனர் மருமகள் காயத்திரி ஓடி சென்று தடுத்து உள்ளார் . கர்ப்பிணி பெண் என்பது பார்க்காமல் கூட வயிற்றின் மீது உதைத்து தாக்கி உள்ளார் படுகாயம் அடைந்த ராஜா குடும்பத்தினர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இதை குறித்து வாணியம்பாடிகாவல் நிலையத்தில் புகார் அளித்தால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் உடனடியாக தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர்