உதவி ஆணையர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

கள்ளக்குறிச்சியில் அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2024-02-18 10:21 GMT

உதவி ஆணையர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

முதல்வர் ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 43 திட்டப் பணிகளுக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதில், கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என், நகரில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது.

இதையொட்டி, கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன் தலைமை தாங்கினார். ஆய்வாளர் சத்தியவாணி முன்னிலை வகித்தார். முதல்வர் பணிகளை தொடங்கி வைத்ததையடுத்து, கட்டுமானப் பணிகளைத் தொடங்க பூமிபூஜை நடத்தி, அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரகுவர ராஜ்குமார், தனி தாசில்தார் மனோஜ் முனியன், அர்த்தநாரீஸ்வரர் கோவில் தனி அறங்காவலர் சிங்காரவேல் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் 3.56 கோடி ரூபாய் மதிப்பிலும், பரிக்கல் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் 2.20 கோடி ரூபாய் மதிப்பிலும் திருப்பணிகள் துவங்கப்பட்டது.

Tags:    

Similar News