ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் நிர்வகிகள் பங்கேற்றனர்.

Update: 2024-05-31 11:29 GMT

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மஞ்சபுத்துார் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில், 5 ஆண்டுகள் முடியாத நிலையில் இருக்கும் ஊராட்சிகளை கலைக்கக் கூடாது. ஊராட்சிகளைக் கலைத்தால் நீதிமன்றத்தை நாடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 44 ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தியாகராஜபுரம் தலைவர் சங்கரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News