ஆத்தூர் : ரூ.1.26 கோடிக்கு பருத்தி வர்த்தகம்

ஆத்தூர் அருகே புதுப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ1.26 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

Update: 2024-04-02 03:03 GMT

ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட பருத்தி 

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்நிலையில் பி.டி.ரகம் குவிண்டால் ரூ.7,289 முதல் ரூ.8,469 வரை, டி.சி.ஹெச்., ரக குவிண்டால் ரூ.9,189 முதல் 10, 889 ரூபாய் வரை, கொட்டு பருத்தி (கழிவு) 3,889முதல் 6,569 வரை விற்பனையானது. மொத்தம் 5,095மூட்டை , 1807.46 மொத்த குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 26 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
Tags:    

Similar News