ஆத்தூர்: முத்துமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முத்துமலை முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-15 04:20 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள 146 அடி உயரம் கொண்ட முத்துமாலை முருகன் கோவிலில் சித்திரை முதல் நாள் தமிழ் வருட பிறப்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

  முருகப்பெருமானுக்கு பால் மஞ்சள் தயிர் தேன் இளநீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சந்தன காப்பு மற்றும் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு முத்துமலை முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .

அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் அதைத்தொடர்ந்து கோவில் வளாகங்களில் வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

Tags:    

Similar News