ஆத்தூர் : திமுக வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை ௯ட்டம்

ஆத்தூரில் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;

Update: 2024-02-25 13:53 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர தனியார் திருமண மண்டபத்தில் திமுக ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ( BLA2),மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்குமான (BLC), கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணார் எஸ். ஆர் .சிவலிங்கம் தலைமையிலும், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி தலைமை கழக பார்வையாளர் டாக்டர் ராஜேஷ்பாபு, ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மாவட்டக் கழக பார்வையாளர் ஆத்தூர் ஸ்ரீராம் ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அனைத்து BLA2 மற்றும் BLC உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பணிகள் என்னென்ன என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News