ஆத்தூர் : மாற்றுக் கட்சியில் இருந்து உறுப்பினர்கள் அதிமுக இணைப்பு
ஆத்தூரில் காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ் இருந்து 5 பேர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் அதிமுகவின் தங்களை இணைத்துக் கொண்டனர்.;
Update: 2024-04-15 11:17 GMT
ஆத்தூரில் காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ் இருந்து 5 பேர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் அதிமுகவின் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் கொத்தம்பாடி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சி சார்ந்த நிர்வாகிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர் பின்னர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரில் ஈடுபட்டு எடப்பாடி யார் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது