ஆத்தூர் : தளவாய்பட்டி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் நீர்
ஆத்தூர் அருகே தளவாய்பட்டி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Update: 2024-05-26 05:39 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேர கன மழை மற்றும் சாரல் மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நீர் நிரம்பி வருகிறது இந்நிலையில் தளவாய்பட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.