மறுகால் பாய்ந்த ஆத்தூா் நீர்த்தேக்கம்

தொடா் மழை காரணமாக, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

Update: 2024-06-28 06:57 GMT

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள இந்த அணை கடந்த ஜனவரி மாதம் இந்த மொத்த கொள்ளளவான 23.6 அடியை எட்டி மறுகால் பாய்ந்தது. அதன் பிறகு கோடை காலத்தில் நீா்மட்டம் குறைந்து வந்தது. கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலை கிராமங்களான பெரும்பாறை, மஞ்சள் பரப்பு, ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நீா்வரத்து அதிகரித்தது. இதனால், 13.1 அடியாக இருந்த நீா்மட்டம் வியாழக்கிழமை 23.6 அடியாக உயா்ந்து குடகனாற்றில் மறுகால் பாய்ந்தது. இதனால், இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த ஆண்டு திண்டுக்கல் மாநகா், ஆத்தூா் முதல் திண்டுக்கல் வரையிலான கிராமங்களுக்கு குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது எனக் கூறப்படுகிறது.
Tags:    

Similar News