ஆத்தூர் : இருசக்கர வாகனத்தை திருடிய நபர் ஓராண்டுக்கு கைது
ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 22-ல் மருத்துவமனை வளாகம் முன்பு சிகிச்சைக்கு வந்த குமார் என்பவருடைய இரு சக்கர வாகனம் காணவில்லை இது குறித்து நகர காவல்துறை விசாரனை ஒரு ஆண்டுக்கு பின் இருசக்கர வாகனம் பெரம்பலூர் சேர்ந்த ஹரிஹரன் கைது செய்து இருசக்கர வாகனம் பறிமுதல்.;
Update: 2024-02-23 02:36 GMT
வாகனம் திருடியவர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் உடையம்பட்டி பகுதியை சேர்ந்த அவர்கள் குமார் ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகை புரிந்த போது தனது இருசக்கர வாகனத்தை மருத்துவமனை வளாகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு சென்றிருந்த நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனம் இல்லாத கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமரா ஆய்வு செய்து இருசக்கர வாகனதரதை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என தெரியவந்தது போலீசார் விரைந்து சென்று ஹரிஹரனை கைது செய்து அவரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தையும் மீட்டனர் ஒரு ஆண்டுக்கு பின் இருசக்கர வாகனம் திருடியவர் கைது.