ஒகேனக்கலில் ஆதரவற்று உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்தி பூஜை
ஆதரவற்று இறந்த ஆத்மாக்கள் சாந்தியடைய தை அமாவாசை நாளில் ஆத்மாத்ம சாந்தி பூஜை ஒகேனக்கல் காவேரி ஆற்றங்கரையில் மைதர்மபுரி தன்னார்வ அமைப்பினர் மூலம் செய்யப்பட்டது.;
ஆதரவற்று இறந்த ஆத்மாக்கள் சாந்தியடைய தை அமாவாசை நாளில் ஆத்மாத்ம சாந்தி பூஜை ஒகேனக்கல் காவேரி ஆற்றங்கரையில் மைதர்மபுரி தன்னார்வ அமைப்பினர் மூலம் செய்யப்பட்டது.
தர்மபுரி நகர பகுதியில் செயல்பட்டு வரும் மை தருமபுரி அமைப்பின் மூலம் ஆதரவற்று இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்து வருகின்றனர். பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என இதுவரை 80 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் இவர்களின் பெயர்,குலம்,கோத்திரம் தெரியாத நிலையில் எங்கள் சொந்தமாக எண்ணி நல்லடக்கம் செய்து வரும் நிலையில்.
இவர்களது ஆத்மாக்கள் சாந்தியடைய தை அமாவாசை நாளில் ஆத்மாத்ம சாந்தி பூஜை ஒகேனக்கல் காவேரி ஆற்றங்கரையில் செய்யப்பட்டது. ஆத்மா பூஜையை தருமபுரி சாஸ்திரி வெங்கட நாராயணன் செய்து வைத்தார். மை தருமபுரி அமைப்பின் சார்பாக மை தருமபுரி அமரர் சேவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறந்த ஆத்மாக்கள் சாந்தியடைய பூஜை செய்து வேண்டிக் கொண்டனர்.