மேலூர் அருகே தாக்குதல் சம்பவம்: ஐகோர்ட் தாமாக விசாரணை
மேலூர் அருகே இரவில் வீடு புகுந்து குடும்பத்தினரை தாக்கி கொல்ல முயற்சித்த சம்பவத்தில் ஐகோர்ட் தாமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம் ஊரில் உள்ள குட்டையில் மீன் பிடிக்கும் உரிமையை பொது ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்ததால் அவர் மீது மற்றொரு தரப்பினர் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக தன் மீது தாக்குதல் நடத்தியதாக வினோத் என்பவர் மீது மேலூர் போலீஸில் புகார் அளித்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் ராசாங்கம் வசிக்கும் தெருவின் மீன் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் னகயில் ஆயுதங்களுடன் நுழைந்த 12 பேர் கொண்ட கும்பல் .
தெருவில் நின்றுக் கொண்டிருந்த ராசாங்கத்தின் அண்ணன் அசோக்கின் மனைவியை தாக்கியதோடு வீடு புகுந்து அசோக்கையும் அவரது மகள் விஜயையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. ராசாங்கம் வீட்டில் இல்லாததால் கும்பலின் தாக்குதலிலிருந்து அவரது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எதிர் வீட்டை சேர்ந்த பெண் காவலர், அவர்களை பாதுகாப்புக்காக தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனை தெரிந்துக் கொண்ட கொலை வெறி கும்பல், அவரது வீட்டுக் கதவு ஜன்னல்களை உடைத்து வெறியாட்டல் ஆடியது. மேலும் வீட்டிற்குள் இருந்தவர்கள் தடுக்க முயன்ற போதும் ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே அந்த கும்பல் வீடு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் தாமாக முன்வந்து ஐகோர்ட் கிளை விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பாக மேலூர் காவல் ஆய்வாளர் மன்னவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
குற்றவாளிகளை கைது செய்து உரிய விசாரணை நடத்த காவல் ஆய்வாளருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.