வாலிபர் மீது தாக்குதல் - பாமக நிர்வாகி அதிரடி கைது.

திண்டிவனம் அருகே பிரம்மதேசத்தில் உணவு வாங்க நின்றிருந்த வாலிபரை தாக்கிய மரக்காணம் ஒன்றிய பாமக தலைவரை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.;

Update: 2024-02-05 09:19 GMT

 சிவா 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள முருக்கேரி அண்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ஜோதிராமன்(24). இவர் கடந்த 3-ஆம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தள்ளுவண்டி கடையில் டிபன் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னூர் மதுரா பிள்ளையார் குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவா வயது 36 (பாமக மரக்காணம் வடக்கு ஒன்றிய தலைவர்) மற்றும் அவருடன் வந்த தினேஷ், ஷாருக்கான் ஆகியோர் ஜோதிராமனை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஜோதிராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஜோதிராமன் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் டி.எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து பின் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் மீதும் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு செய்த போலீசார், பாமக பிரமுகர் சிவாவை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சிவா மீது பல்வேறு சண்டை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News