கெங்கவல்லியில் மணல் கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற ஆர்ஐ மீது தாக்குதல்

கெங்கவல்லி சுவேத நதிக்கரையில் மணல் கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற ஆர்ஐ, விஏஓ மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-27 12:41 GMT
கெங்கவல்லி காவல் நிலையம்

கெங்கவல்லி சுவேத நதிக்கரையில், மணல் கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற வருவாய் ஆய்வா ளர்,விஏஓ, உதவியாளரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை கைது செய்ய கோரி, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, வலசக் கல்பட்டி பாலத்தின் அருகில் சுவேத நதிக்கரையில் மணல் கடத்துவதாக, கெங்கவல்லி தாசில்தார் வெங்க டேசனுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் கெங்கவல்லி ஆர்ஐ முனிராஜ், விஏஓ ஆனந்த், விஏஓ உதவியாளர் ஆனந்தன் உள்ளிட்ட வருவாய்த்து றையினர் அப்பகுதிக்கு நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் சென்றனர். இதை அறிந்த மணல் கடத்தல் கும்பல், 20க்கும் மேற்பட்டடோர், ஆர்ஐ, விஏஓ, விஏஓ உதவியாளர் ஆகிய மூவரையும் கல்லால் தாக்கியுள்ளனர். உயிர் பிழைத்தால் போதும் என அங்கிருந்து தப்பித்து ஓடி வந்துள்ளனர்.இது குறித்து விஏஓ சக்திவேல், கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

மணல் கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற வருவாய் துறையினரை கல்லால் தாக்கிய சம்பவம். அதிகாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News