குளச்சல் அருகே தொழிலாளி மீது தாக்குதல் 

குளச்சல் அருகே தொழிலாளி மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் மீது வழக்குப்பதிவு

Update: 2024-01-30 07:13 GMT

வழக்குப்பதிவு

குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி பகுதி சேர்ந்தவர் விக்டர் அருள் (52) கடலில் மீன் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ். இவர்கள் உறவினர்கள் .அலெக்சின் தாயிடமிருந்து விக்டர் அருள் கடந்த 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூபாய் ஒரு லட்சம் கடனாக வாங்கி உள்ளார். வாங்கிய கடனுக்காக கடந்த வருடம் அக்டோபர் மாதம் வரை 21 வருடமாக மாதம் வட்டி கொடுத்துள்ளார்.       கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து வட்டி கொடுக்கவில்லை என தெரிகிறது. நேற்று முன்தினம் விக்டர் அருள் வீட்டுக்கு வட்டியை வாங்குவதற்கு அலெக்ஸ் மற்றும் அவரது தாயார் சென்றனர். அப்போது விக்டர் அருளுக்கும் அலெக்ஸ்க்கும்  வாய்த் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அலெக்ஸ் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் விக்டரை பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த விக்டர் அருள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  இது தொடர்பான புகாரின் பேரில் குளச்சல் போலீசார் அலெக்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News