தூத்துக்குடியில் செல்போன் கடையில் திருட முயற்சி: ரவுடி கைது

தூத்துக்குடியில் செல்போன் கடையில் உரிமையாளரை தாக்கி செல்போன் திருட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-06-15 11:16 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடியில் செல்போன் கடையில் உரிமையாளரை தாக்கி செல்போன் திருட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் கடந்த 12.06.2024 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது,

கோட்டூர் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில், அவர் தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்த ராஜலிங்கம் மகன் சங்கரேஸ்வரன் (25) என்பதும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் செல்போன் திருட முயற்சி செய்தும்,

Advertisement

கடை உரிமையாளரை இரும்பு கம்பியால் தாக்க முயன்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் சங்கரேஸ்வரனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சங்கரேஸ்வரன் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் உட்பட 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News