கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி
நத்தம் பஸ் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கத்தியால் மூக்கு, மார்பு, கையில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது;
Update: 2024-03-01 07:28 GMT
கத்தி குத்து
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே வேலம்பட்டியைச் சேர்ந்தவர் ஆசை விவசாயி. இவர் நத்தம் பஸ் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ஆசையை கத்தியால் குத்தியதில் மூக்கு, மார்பு, கையில் குத்தியுள்ளனர். இதை தடுக்க வந்த இடையபட்டியைச் சேர்ந்த ஆண்டிச்சாமிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குத்திவிட்டு அந்த நபர்கள் தப்பிவிட்டனர்.உடன் காயம்பட்டவர்களை அருகிலிருந்தவர்கள் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.