பெரம்பலூரில் வழக்கறிஞர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி
பெரம்பலூரில் வழக்கறிஞர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 16:08 GMT
அலுவலகத்தில் திருட முயற்சி
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கிருஷ்ணா தியேட்டர் அருகே வழக்கறிஞர்கள் சத்தியசீலன். நந்த கிஷோர் பிரபாகர் ஆகியோர் அலுவலகம் நடத்தி வந்தனர். இவ் அலுவலகத்தில் ேநற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வழக்கறிஞர்கள் இன்று கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.