துறையூர் அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: திருடனுக்கு தர்ம அடி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பாகளவாடி கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனை கிராம மக்கள் விரட்டிப் பிடித்து தர்ம கொடுத்தனர்.;

தர்ம அடிவாங்கிய திருடன்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பாகளவாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதி.இவரது மனைவி லதா காய்கறி வியாபரம் செய்து வருகின்றனர்.இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அதிகாலையில் மர்மநபர் ஒருவர் வீடு புகுந்து லதாவின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது லதா சுதாரித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார் இதையடுத்து திருடன் தப்பி ஓடிய நிலையில் கிராமமக்கள் உதவியுடன் அருகில் இருக்கும் காட்டுக்குள் தேடியபோது திருடன் முற்புதரில் இருப்பது தெரியவந்தது.அவனைப் பிடித்த பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து விடிய விடிய தர்ம அடிகொடுத்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற புலிவலம் போலீசார் மரத்தில் கட்டி வைத்திருந்த திருடனை மீட்டனர்.பின்னர் அவர் மீது புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர் .