தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் ரூ.12 லட்சத்திற்கு ஏலம்.
Update: 2023-12-14 06:09 GMT
பட்டு கூடு
தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில், பட்டுக்கூடுகள் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் போனது. தர்மபுரி நகரில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில், பட்டுக்கூடு ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 23 விவசாயிகள் 2576 கிலோ பட்டு கூடுகளை கொண்டு வந்தனர். ஒரு கிலோ வெண்பட்டு அதிகபட்சமாக 7569-க்கு ஏலம் போனது. இதே போல், குறைந்த பட்சமாக 7385க்கும், சராசரியாக 7467க்கும் ஏலம் போனது.கடந்த இரு மாதங்களில், நேற்று அதிகபட்ச விலைக்கு ஏலம் போனதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டுக்கூடுகள் மொத்தம் ரூ.12 லட்சத்து 3,930க்கு ஏலம் போனது.