வழக்கறிஞரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
புதுக்கடை அருகே வழக்கறிஞரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 07:26 GMT
வழக்கறிஞரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கைசூண்டி பகுதி பருத்திவிளையை சேர்ந்தவர் காட்வின் ஜெயக்குமார்(48) இவர் குழித்துறை கோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். சம்பவத்தன்று இவர் ஒரு கணவன் மனைவிக்கு இடையில் இருந்த பிரச்சனை தொடர்பாக, மனைவிக்கு ஆதரவாக புதுக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். இந்நிலையில் கைசூண்டி புலையன்விளை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவராக உள்ள மனோகரன் (55) என்பவர் ஸ்டேஷனுக்கு வந்து வக்கீலை பார்த்து எனது மருமகனுக்கு எதிராக எப்படி நீ வழக்கில் வருவாய் என கேட்டு தரக்குறைவான வார்த்தைகளால் பேசி காட்வின் ஜெயகுமாரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த வழக்கறிஞர் புதுக்கடை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மனோகரனை கைது செய்தனர்.