ஆட்டோ மேற்கூறையின் மேல் தென்னங்கீற்று
தஞ்சை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் பாபநாசம் கிளை சங்கத்தைச் சேர்ந்த ஓம் சக்தி ஆட்டோ உரிமையாளர் ராமலிங்கம் தனது ஆட்டோ மேற்கூறையின் மேல் தென்னங்கீற்றுகொண்டு வெயில் பாதுகாப்பு கவசம் அமைத்துள்ளார்.;
பாபநாசம் ஆட்டோ ஓட்டுநர்
பாபநாசம் கிளை சங்கத்தைச் சேர்ந்த ஓம் சக்தி ஆட்டோ உரிமையாளர் ராமலிங்கம் தனது ஆட்டோ மேற்கூறையின் மேல் தென்னங்கீற்று கொண்டு வெயில் பாதுகாப்பு கவசம் அமைத்து வெயில் கொடுமைகளிலிருந்து பயணிகளை பாதுகாக்கும் வகையில் அமைத்துள்ளார்.
அவரிடம் கேட்கும் பொழுது நான் பாபநாசம் பகுதிகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக சொந்த ஆட்டோ வைத்து ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறேன். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. பயணிகள் ஆட்டோவில் அமர்ந்து வரும் பொழுது மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஆகவே இந்தத் தென்னங்கீற்று ஓலையை மேற்கூறையில் அமைத்து ஆட்டோ ஓட்டி வருகிறேன். இது அமைத்த பிறகு வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதாக உணர்கிறேன். பொதுமக்களிடமும் வரவேற்பு உள்ளது என்று தெரிவித்தார்.