காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்குடியில் கடனை அடைத்தும் தடையில்லா சான்று வழங்க மறுத்த தனியார் வங்கியை கண்டித்து சிஐடியூ ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-03-08 01:44 GMT
ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அம்பேத்கர் சிலை எதிரில் உள்ள HDFC வங்கியில் காரைக்குடி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ கடன் பெற்றுள்ளனர். கடனை கொரோனா காலத்திலும் தங்களது நகைகளை அடகு வைத்து முழுமையாக கட்டி முடித்தும் மூன்று ஆண்டுகளாக NOC கொடுக்க மறுப்பதாக கூறி CITU ஆட்டோ சங்க தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பின்பு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வங்கி வாயில் முன்பு முற்றுகையிட்டு வங்கி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்