வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் மனு

வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2023-12-13 09:23 GMT
வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை தலைவர் பெருமாள் தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனு வில் அவர்கள் கூறியிருப்பதாவது:- மேல்மலையனூர் தாலுகா வளத்தி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், அங்குள்ள போலீஸ் நிலையம் எதிரே 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். கடந்த 3 மாதங்களாக வளத்தியை சேர்ந்த சில ஆட்டோ டிரைவர் கள் 25-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஓட்டக்கூடாது என்று தடுக் கின்றனர். இதனால் 25-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள், ஆட்டோக்களை ஓட்ட முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம்.

ஆகவே வளத்தி போலீஸ் நிலையம் எதிரே ஆட் டோக்களை நிறுத்தி தொழில் செய்வதை உறுதிப்படுத்தி எங்களு டைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

Similar News