பறவை காய்ச்சல் கண்காணிப்பு பணி கலந்தாய்வு
கலெக்டர் அலுவலகத்தில் பறவை காய்ச்சல் கண்காணிப்பு பணி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-05-01 14:20 GMT
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் பறவை காய்ச்சல் கண்காணிப்பு பணிக்கான அனைத்து துறை ஒருங்கிணைப்பு குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் தெரிவித்தாதவது- பறவைக் காய்ச்சலானது பறவை இனங்களைத்தாக்கும் ஒரு வைரஸ் தொற்றுநோய். மனிதர்களையும் இந்நோய் தாக்கும். பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகளுள் பலவகைகள் இருந்தாலும் தற்போது பரவி வரும் எச்5என்1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. கேரளாவில் ஏற்பட்ட பறவை காய்ச்சல் நோய் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை மற்றும் காக்கவிளை பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேர தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகர் நல அலுலவர் மரு.ராம்குமார், உதவி இயக்குநர்கள் சத்தியமூர்த்தி (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்), கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ராதாகிருஷ்ணன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர், கோட்ட உதவி இயக்குநர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.