AVPS ஒலிம்பியாட் தேர்வு
1768 மாணவச் செல்வங்கள் இத்தேர்வில் பங்கு பெற்றது;
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் AVPS ஒலிம்பியாட் தேர்வு முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவச் செல்வங்களுக்கு நடைபெற்றது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் இத்தேர்வில் பங்கு பெற்றனர். மேலும் இத்தேர்வில் பெரம்பலூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளின் மாணவச் செல்வங்களும், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவச் செல்வங்களும் திரளாக பங்கு பெற்றனர் 1768 மாணவச் செல்வங்கள் இத்தேர்வில் பங்கு பெற்றது சிறப்பிற்குரியது. இத்தேர்வை பள்ளியின் சேர்மன் . டாக்டர் .A . ராம்குமார் பள்ளியின் துணை சேர்மன் மோகனசுந்தரம் தலைமையேற்று நடத்தினார்கள் இத்தேர்வினை முதல்வர்கள் சாரதா ,சந்திரோதயம் துணை முதல்வர் ராஜேந்திரன்,மேல்நிலை வகுப்பு இயக்குனர் கார்த்திக் ஆசிரியப் பெருமக்களும் , அலுவலக உதவியாளர்கள் அனைவரும் , மற்றும் மெஸ் ஊழியர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் , உடன் இருந்து திறம்பட நடத்தினார்கள். ஆல்மைட்டி குடும்பம் இதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள் .