அரசுப்பள்ளி மாணவிகளுக்கு விருது

திருக்கோவிலூரில் உலகத் தாய்மொழி நாள் விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Update: 2024-03-01 17:03 GMT

திருக்கோவிலூரில் உலகத் தாய்மொழி நாள் விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கோவல் தமிழ் சங்கம் சார்பில் உலகத்தாய் மொழி நாள் விழா நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் உதியன் தலைமை தாங்கினார். செயலாளர் பாரதிமணாளன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கே.வி.ஜெயஸ்ரீ தொடக்க உரையாற்றினார். தமிழ் சங்க புரவலர் டி.குணா, ராணுவ வீரர் கு.கல்யாண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகரமன்ற தலைவர் டி.என்.முருகன் கலந்து கொண்டு பண்பாட்டு நலன்களில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவிகளுக்கு அங்கவை சங்கவை விருது வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மயிலம் தமிழ்க்கல்லூரி முதல்வர் ச.திருநாவுக்கரசு தமிழ் மொழி பாடத்தில் சிறப்பிடம் பெற்ற 51 மாணவிகளுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் பரிசு, கேடயம் வழங்கினார்.

இதில் தலைமை ஆசிரியர் ந.காமராஜ், மூத்த கல் வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், கவிஞர் அருள்நாதன் தங்கராசு, கவிஞர் கவிநிலவன் ஆகியோர் கலந்து கொண்டு மாண விகளை பாராட்டி பேசினர். விழாவில் தமிழ் சங்க பொறுப்பாளர் கள், ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் திருக்குறள் கழக அறக்கட்டளை துணைத்தலைவர் கவிஞர் உலகமாதேவி நன்றி கூறினார்.

Tags:    

Similar News