விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் மனநலம் குறித்த விழிப்புணர்வு
விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் ஆரோக்கியம், மனநலம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் ஆரோக்கியம், மனநலம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இக்கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வர் கணேசன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட மனநல மருத்துவர் அனிதா நிகழ்வில் பங்கேற்று பேசினார். அவர் தனது உரையில் மகளிர் ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டியஉணவுப் பழக்க வழக்கங்கள், உடல் பாதுகாப்பு முறைகள் போன்றவைகள் குறித்தும், மனநலப் பாதுகாப்பு, மன தை தூய்மையாக வைத்துக் கொள பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சமூக வலைதளங்களைத் தொடர்ந்து பார்த்து, அந்த பழக்கத்துக்கு அடிமையாகமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை போன்றவை குறித்து பல்வேறு எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கூறி பேசினார்.
தொடர்ந்து மாண விகளின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தும் அவர் பேசினார். இதைத் தொடர்ந்து மருத்துவர் விமல்ராஜும் பேசினார். இந்த நிகழ்வில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்த்துறையின் கௌரவ விரிவுரையாளர் எம்.ஜி.ஆர். சச்சிதானந்தம் வரவேற்றார். நிறைவில், கௌரவ விரிவுரையாளர் கனிமொழி நன்றி கூறினார். தொடர்ந்து இரண்டாவது நாளாக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுகிறது.